தேயிலை, இறப்பர்,தென்னைக்கான உர மானியத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்

தேயிலை, இறப்பர்,தென்னைக்கான உர மானியத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்

தேயிலை, இறப்பர்,தென்னைக்கான உர மானியத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2016 | 12:22 pm

தேயிலை இறப்பர் மற்றும் தென்னை என்பனவற்றிற்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ள உர மானியத்தை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய ஒரு ஹெக்டேயர் தேயிலை செய்கைக்கான உர மானியமாக 10,000 ரூபாவும், ஒரு ஹெக்டேயர் இறப்பர் செய்கைக்கான உர மானியமாக 5000 ரூபாவும், ஒரு ஹெக்டேயர் தென்னை செய்கைக்கான உர மானியமாக 8000 ரூபாவும் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளது.

தீர்மானிக்கப்பட்டுள்ள உர மானியத்திற்கான கொடுப்பனவுகளை மேலும் 1000 ரூபாவால் அதிகரிப்பதற்கு நிதி அமைச்சுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த தீர்மானம் அடங்கிய அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலரும் புதுவருடத்தின் பின்னரான ஒருவாரக் காலப்பகுதிக்குள் தேயிலை இறப்பர் மற்றும் தென்னை பயிர்ச் செய்கைக்கு வழங்கப்படவுள்ள உர மானியம் குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்