தெற்கு அதிவேக வீதியில் நிலவக்கூடிய போக்குவரத்து நெரிசலை மட்டுப்படுத்த நடவடிக்கை

 தெற்கு அதிவேக வீதியில் நிலவக்கூடிய போக்குவரத்து நெரிசலை மட்டுப்படுத்த நடவடிக்கை

 தெற்கு அதிவேக வீதியில் நிலவக்கூடிய போக்குவரத்து நெரிசலை மட்டுப்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2016 | 11:12 am

பண்டிகை காலத்தில் தெற்கு அதிவேக வீதியில் நிலவக்கூடிய போக்குவரத்து நெரிசலை மட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மாத்தறை கொடகம நுலைவாயில் பகுதியில் கே்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிவேக வீதியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு அதிவேக வீதியின் போக்குவரத்து நெரிசல் தொடர்பில் 1969 என்ற இலகத்திற்கு அழைப்பை மேற்கொண்டு அறிந்துக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் நலன் கருதி இன்று இரண்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பிற்பகல் ஒன்று ஐந்துக்கு கொழும்பு கோட்டை தொடக்கம் மஹவ வரையிலான விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், இரவு 7.30 இற்கு கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை வரை விசேட ரயில் சேவையொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்