கேரளாவிலுள்ள ஆலயமொன்றில் பாரிய வெடிப்புச் சம்பவம்: 100 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு (VIDEO)

கேரளாவிலுள்ள ஆலயமொன்றில் பாரிய வெடிப்புச் சம்பவம்: 100 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2016 | 11:45 am

இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 100 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு 350 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் பராவூர் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 3 மணியளவில் 10,000 முதல் 15,000 பேர் வரையில் கலந்து கொண்ட மத பண்டிகை ஒன்றின் போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காயமடைந்தவர்கள் திருவாணந்தபுரத்திலுள்ள அரசமருத்துவக் கல்லூரியில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் உயிரிழந்த மக்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவிப்பதோடு காயமடைந்தோருக்காக பிரார்த்திப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்