கிரேன்ட்பாஸில் சட்டவிரோதமாக சந்தன மரக்குற்றிகளை கொண்டு சென்ற இருவர் கைது

கிரேன்ட்பாஸில் சட்டவிரோதமாக சந்தன மரக்குற்றிகளை கொண்டு சென்ற இருவர் கைது

கிரேன்ட்பாஸில் சட்டவிரோதமாக சந்தன மரக்குற்றிகளை கொண்டு சென்ற இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2016 | 2:47 pm

கொழும்பு கிரேன்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமாக சந்தன மரக்குற்றிகளை கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லொறி ஒன்றில் சந்தன மரக்குற்றிகளை கொண்டு சென்ற போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 450 கிலோகிராம் பெறுமதியான சந்தன மரக்குற்றிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு மற்றும் கொட்டாவ பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்