ஊருபொக்க தேசிய பாடசாலை அதிபர் கைது

ஊருபொக்க தேசிய பாடசாலை அதிபர் கைது

ஊருபொக்க தேசிய பாடசாலை அதிபர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2016 | 11:26 am

ஊருபொக்க தேசிய பாடசலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை வளாகத்திற்குள்லிருந்த 6 மரங்களை அனுமதியின்றி வெட்டியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள அதிபரால் பாடசாலை வளாகத்திலிருந்த ஆறு மரங்கள் வெட்டப்பட்டுள்ளதுடன் அவற்றில் மூன்று மரங்களின் பலகைகள் காணாமற் போயுள்ளதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஊருபொக்க தேசிய பாடசாலையின் அதிபர் மொரவக்க நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தக்கட்டதை அடுத்து தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்