சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிவாசிகள் ஆர்ப்பாட்டம்

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிவாசிகள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

07 Apr, 2016 | 9:56 pm

சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் பல தரப்பினரிடையேயும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், பழங்குடியினத்தவர்களும் வீதியில் இறங்கி தமது எதிர்ப்பினை இன்று வெளிப்படுத்தினர்.

திருகோணமலை – சம்பூர் சந்தோஷபுரம் சிவசக்தி வித்தியாலயத்திற்கு முன்பாக பழங்குடி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அனல் மின் நிலையம் அமைக்கப்படுமாயின் தாம் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும் எனத் தெரிவித்தும் அனல் மின் நிலைய திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் ஆதிவாசிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அனல் மின் நிலையம் உருவாக்கப்படுமாயின் கடற்றொழில் பாதிக்கப்படுவதுடன் தாம் பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கும் உள்ளாக நேரிடும் என அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்