எம்பிலிப்பிட்டிய இளைஞன் மரணம்: விசாரணை அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

எம்பிலிப்பிட்டிய இளைஞன் மரணம்: விசாரணை அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

எம்பிலிப்பிட்டிய இளைஞன் மரணம்: விசாரணை அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2016 | 7:03 am

எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற வைபவமொன்றின்போது பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்குழுவின் அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுவினால் அடையாளம் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

சம்வத்தின்போது பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து அந்த அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக நிறுவன விதிக்கோவையின் பிரகாரம், பொலிஸார் ஒழுக்கம் மீறி செயற்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்தார.

இந்த விசாரணை அறிக்கை தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (07) ஆணைக்குழு கூடி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்போது எடுக்கப்படும் தீர்மானத்தின் படி சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோககத்தர்களிடம் விளக்கம் கோரப்படுவதுடன், அவர்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஒழுக்காற்று குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்