இன்னமும் முற்றுப்பெறாத “வடக்கின் வசந்தம்” திட்டத்தின்  குளங்கள் புனரமைப்பு

இன்னமும் முற்றுப்பெறாத “வடக்கின் வசந்தம்” திட்டத்தின் குளங்கள் புனரமைப்பு

இன்னமும் முற்றுப்பெறாத “வடக்கின் வசந்தம்” திட்டத்தின் குளங்கள் புனரமைப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Apr, 2016 | 8:02 pm

கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ”வடக்கின் வசந்தம்” திட்டத்தினூடாக குளங்களை புனரமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகவில்லை என்ற குற்றச்சாட்டு விவசாயிகளால் முன்வைக்கப்படுகின்றது.

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வடக்கின் வசந்தம் திட்டம், 2009 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அப்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட
செயற்குழுவின் தலைவராக பெசில் ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடக்கில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் விவசாயிகளின் நலன்கருதி சேதமடைந்துள்ள குளங்களை புனரமைப்பதற்காகவும் பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டது.

மன்னாரிலுள்ள குளங்களை புனரமைப்பதற்கு, வடக்கின் வசந்தம் திட்டம் முதல், வருடாந்த நிதி ஒதுக்கீட்டின் கீழும் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்றதாக அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

மன்னாரிலுள்ள குளங்கள் மத்திய அரசினாலும் மாகாண அரசினாலும் நிருவகிக்கப்படுகின்றன.

இத்தகைய குளங்களை புனரமைத்து, விவசாயத்தறையை மேம்படுத்துவதற்கு வடக்கின் வசந்தம் திட்டத்தினூடாக 4,878.77 மில்லியன் ரூபா விவசாயத்துறைக்கு செலவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பாரிய குளங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 11 குளங்களும் சிறு குளங்களின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 372 குளங்களும் புனரமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்