வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தகுதிகாண் வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க போராட்டம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தகுதிகாண் வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க போராட்டம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தகுதிகாண் வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2016 | 11:48 am

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தகுதிகாண் வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலதிக கொடுப்பனவிற்கான நேரம் மாதத்திற்கு 80 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தகுதிகாண் வைத்திய நிபுணர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் மாலை 4 மணிக்கு பின்னர் பணிகளில் ஈடுபடுவதிலிருந்து விலகியிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் உரிய தீர்வு எட்டப்படவில்லை என சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்தார்.

ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் கோரியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் வடக்கு சுகாதார திணைக்கள பணிப்பாளருடன் நாளை பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் தர்மகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்