மூன்று புதிய மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கு தீர்மானம்

மூன்று புதிய மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கு தீர்மானம்

மூன்று புதிய மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கு தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2016 | 12:06 pm

மூன்று புதிய மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.சி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல ரயில் கடவை பகுதியிலும் பொல்கஹவல ரயில் கடவைக்கு மேலாகவும், மற்றும் ராஜகிரிய – நாவல பகுதியிலும் மேம்பாலங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நிதியுதவின் கீழ் 53 மில்லியன் யூரோ இந்த நிர்மாணத்திட்டங்களுக்காக செலவிடப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்