பேலியகொடை – பியகம வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

பேலியகொடை – பியகம வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

பேலியகொடை – பியகம வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2016 | 11:01 am

பேலியகொடை பியகம வீதியின் பாலமொன்றில் கொள்கலன் வாகனம் மோதி விபத்திற்குள்ளானதை அடுத்து குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாலத்தின் ஒரு பகுதியிலுள்ள இரும்பு தகடு வீதியோரமாக வீழ்ந்துள்ளதால் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நெடுஞ்சாலைக்கு மேலாக ரயில் செல்வதற்கு அமைக்கப்பட்ட இந்த பாலத்திற்கு கீ்ழ் அதிக உயரம் கொண்ட வாகனங்கள் பயணிக்க கூடாதென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இன்று (03) அதிகாலை கொள்கலன் குறித்த பாலத்திற்கு கீழ் செல்வதற்கு முயற்சித்த வேளை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மேலும் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுஞ்சாலைக்கும் பாலத்திற்கும் இடையில் 3.5 மீற்றர் உயரமே காணப்படுகின்றது.

குறித்த வீதியில் பயணிப்பது தொடர்பில் வீதியின் இரு மருங்கிலும்
அறிவுறுத்தல் பலகைகள் போடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் வாகன சாரதிகள் இதனை பொருட்படுத்தாது பயணிப்பதால் விபத்துக்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை மாற்றுவீதியாக கண்டி வீதியின் பட்டிய சந்தியினூடாக ரயில் நிலைய வீதிக்கு சென்று பியகமவுக்கு செல்ல முடியும் என பொலிஸார் கூறுகின்றனர்.

வீதியை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்