சம்மாந்துறையில் பிள்ளையொன்றை சித்திரவதைக்கு உட்படுத்திய பெண் கைது

சம்மாந்துறையில் பிள்ளையொன்றை சித்திரவதைக்கு உட்படுத்திய பெண் கைது

சம்மாந்துறையில் பிள்ளையொன்றை சித்திரவதைக்கு உட்படுத்திய பெண் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2016 | 3:52 pm

சம்மாந்துறை அட்டப்பளம் பகுதியில் பிள்ளையொன்றை சித்திரவதைக்கு உட்படுத்திய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 55 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமது மருமகனின் முதற் தாரத்தின் குழந்தையையே குறித்த பெண் மிக மோசமாக சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

5 வயதுடைய குறித்த பிள்ளை உணவு கேட்டதை அடுத்து சூடாக்கப்பட்ட கரண்டியால் கையில் சூடு வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த குழந்தை நிந்தவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்