வேலணை பிரதேச செயலாளரின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

வேலணை பிரதேச செயலாளரின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

வேலணை பிரதேச செயலாளரின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

02 Apr, 2016 | 10:27 pm

வேலணை பிரதேச செயலாளரின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

வேலணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் நிறைவடையாமல் இருப்பதாகவும் இதன் காரணமாக பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் இந்தக் கோரிக்கை தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் வினவினோம்.

வேலணை பிரதேச செயலாளரிடம் நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவரை இடமாற்றம் செய்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்