நீர்கொழும்பில் ஆயுதங்கள் கைப்பற்றல்: இருவர் கைது

நீர்கொழும்பில் ஆயுதங்கள் கைப்பற்றல்: இருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

02 Apr, 2016 | 9:26 pm

நீர்கொழும்பு, கிம்புலப்பிட்டிய பகுதியிலுள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களுள் வெளிநாட்டுத் தயாரிப்பிலான கைத்துப்பாக்கி மற்றும் குண்டுகளும் உள்ளடங்குகின்றன.

குறித்த ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்