செல்வராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி

செல்வராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி

செல்வராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2016 | 12:08 pm

செல்வராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க புதிய படத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

‘கான்’ படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து தனது அடுத்து படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் செல்வராகவன்.

அப்போது தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதியை செல்வராகவன் இயக்க ஒரு படத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இடையே, கெளதம் மேனன் தயாரிப்பில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தைத் தொடங்கினார். எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார் செல்வராகவன்.

ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதால் விஜய் சேதுபதியும் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.

தற்போது ‘ஆண்டவன் கட்டளை’, ‘றெக்க’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

அதனைத் தொடர்ந்து செல்வராகவன் படம் அடுத்தாண்டு தொடங்கப்படும் என தெரிகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்