குமார் குணரட்னத்திற்கு ஒருவருட சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிப்பு

குமார் குணரட்னத்திற்கு ஒருவருட சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிப்பு

குமார் குணரட்னத்திற்கு ஒருவருட சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 Mar, 2016 | 5:56 pm

முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான குமார் குணரட்னத்திற்கு இன்று தளர்த்தப்பட்ட வேலையுடன் கூடிய ஒருவருட சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதவான் குமார் குணரட்னத்திற்கு ஒருவருட சிறைத்தண்டனையை விதித்தார்.

இலங்கையின் குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருடத்தின் நவம்பர் மாதம் முதலாம் திகதி குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டிருந்தார்.

கேகாலை, அங்குருவெல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தபோது குமார் குணரட்னம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவுஸ்திரேலிய குடியுரிமையைப் பெற்றுள்ள குமார் குணரட்னம், கடந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியன்று சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருகை தந்திருந்தார்.

ஆயினும், அவரது விசா அதே ஜனவரி மாதம் 31 ஆம் திகதி காலாவதியானது.

அதனையடுத்து, குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டதுடன், தொடர்ச்சியாக 15 தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்