வௌ்ளவத்தையில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

வௌ்ளவத்தையில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

வௌ்ளவத்தையில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2016 | 11:20 am

வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி தன்னியக்க துப்பாக்கியை வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது நீர்கொழும்பைச் சேர்ந்த 31 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த சந்தேநபர், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி மினுவாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் இந்திக ஜயசிங்கவை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்