வவுனியா மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

வவுனியா மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2016 | 12:31 pm

வவுனியா மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைக்கான நேர அட்டவணை போன்று தனியார் பஸ் சேவைக்கும் உகந்த நேர அட்டவணை வழங்குமாறு ஊழியர்கள் ​கோரிக்கை விடுத்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சீரான முறையில் சேவையில் ஈடுபடாமையினால் தாம் பாதிக்கப்படுவதாகவும் தனியார் பஸ் ஊழியர்கள் சுட்டிக்காட்டினர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், வேகமாகப் பயணித்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனியார் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரை விடுவிக்குமாறும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த பணிப் பகிஷ்கரிப்பினால் கிராமப் பகுதிகளுக்கான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டதாகவும் இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்