மியன்மாரின் புதிய அதிபராக ஹிடின் கியா பதவியேற்பு

மியன்மாரின் புதிய அதிபராக ஹிடின் கியா பதவியேற்பு

மியன்மாரின் புதிய அதிபராக ஹிடின் கியா பதவியேற்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2016 | 3:52 pm

மியன்மாரின் புதிய அதிபராக ஆங் சான் சூகியின் ஜனநாயகக் கட்சியின் நெருங்கிய உதவியாளரான ஹிடின் கியா (69) இன்று பதவியேற்றுள்ளார்.

சுமார் 50 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இராணுவத்தைச் சாராத ஒருவர் மியன்மாரின் அதிபராவது இதுவே முதல் முறையாகும். இவர் அடுத்த ஐந்து ஆண்டுக்கு பதவியில் நீடிக்கவுள்ளார்.

நீண்ட காலமாக இராணுவ ஆட்சி நடைபெற்று வந்த மியன்மாரில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வலியுறுத்தி ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி போராடி வந்தது.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 652 க்கு 360 வாக்குகள் பெற்று ஹிடின் கியா வெற்றி பெற்றார். இதையடுத்து, மியன்மாரின் புதிய அதிபராக அவர் இன்று பதவியேற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்