மன்னாரில் மலசலக்கூட குழியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

மன்னாரில் மலசலக்கூட குழியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

மன்னாரில் மலசலக்கூட குழியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2016 | 10:37 pm

மன்னார், இலுப்பைக்கடவை பகுதியில் இன்று மாலை ஒருதொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியொன்றிலுள்ள பாழடைந்த மலசலக்கூட குழியொன்றினுள் இருந்து இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

இந்த வெடிபொருட்கள் தொடர்பில் கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மலசலக்கூட குழியிலிருந்து ஆயுதங்கள் தோண்டியெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

மீட்கப்பட்ட வெடிபொருட்களில் 14 மிதிவெடிகள், 21 வெவ்வேறு ரக குண்டுகள் ஆர்.பீ.ஜீ. உள்ளிட்ட வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெடி பொருட்கள் இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மீட்கப்பட்ட இந்த வெடிபொருட்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்