தேசிய பாதுகாப்பு தொடர்பில் கருணாசேன ஹெட்டியாரச்சி விளக்கம்

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கருணாசேன ஹெட்டியாரச்சி விளக்கம்

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2016 | 9:50 pm

தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, காணிகள் சிலவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்க முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முக்கிய கேந்திர நிலையங்களைத் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், காணிகளின் உரிமையாளர்களுக்கு உயரிய சலுகைகளையும் நஷ்ட ஈடுகளையும் வழங்கத் தாம் தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, உயர் பாதுகாப்பு வலயம் என்ற ஒன்று தற்போது நடைமுறையில் இல்லை என்பதால் பாதுகாப்புத் தேவைப்படும் பகுதிகள் தொடர்பில் மாத்திரமே சிந்திக்க வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அச்சுறுத்தல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்ட கருணாசேன ஹெட்டியாரச்சி, அதுகுறித்து தாம் அவதானத்துடன் இருப்பதாகவும் இதன்பொருட்டு தாம் உதவிகளுக்காகவோ ஆலோசனைகளுக்காகவோ இதுவரை எந்தவொரு நாட்டையும் நாடவில்லை எனவும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்