து. ரவிகரனின் அலுவலகம் முன்பாக வட மாகாண சுகாதாரத் தொண்டர் ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

து. ரவிகரனின் அலுவலகம் முன்பாக வட மாகாண சுகாதாரத் தொண்டர் ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2016 | 10:23 pm

தமது கோரிக்கைகளை உரிய அதிகாரிகள் கவனத்திற்கொள்ளவில்லை என தெரிவித்து,  முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் உள்ள து.ரவிகரனின் அலுவலகத்திற்கு முன்பாக சுகாதாரத் தொண்டர் ஊழியர்களினால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல வருடங்களாக சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்றும் தமது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை சுகாதாரத் தொண்டர் ஊழியர்கள் முன்னெடுத்தனர்.

கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனிடம்
தமது கோரிக்கைள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தரப்பினரிடம் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத்தருவதாக வடமாகாண சபை உறுப்பினர் உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்