சாவகச்சேரி, மரவன்பிளவு பிரதேசத்தில் தற்கொலை அங்கி உட்பட வெடிப்பொருட்கள் மீட்பு

சாவகச்சேரி, மரவன்பிளவு பிரதேசத்தில் தற்கொலை அங்கி உட்பட வெடிப்பொருட்கள் மீட்பு

சாவகச்சேரி, மரவன்பிளவு பிரதேசத்தில் தற்கொலை அங்கி உட்பட வெடிப்பொருட்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2016 | 12:24 pm

யாழ் சாவகச்சேரி பொலிஸ் பிரிவின் மரவன்பிளவு பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து இன்று காலை தற்கொலை அங்கி உட்பட வெடிப்பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தப்பிச்சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் விடுத்துள்ள அறிக்ைகயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு குண்டுகளும் டி.என்.டி. வெடிப்பொருட்கள் அடங்கிய மூன்று பொதிகளும், 9 மில்லிமீற்றர் ரக 100 ரவைகளும் இதன்போது மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குண்டுகளை வெடிக்க வைப்பதற்காக பயன்படுத்தப்படும் 2 மின்கலங்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யுத்தகாலத்தில் குறித்த பகுதியில் இந்த வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்