காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகள் இரண்டாம் நாளாக வவுனியாவில்

காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகள் இரண்டாம் நாளாக வவுனியாவில்

காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகள் இரண்டாம் நாளாக வவுனியாவில்

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2016 | 6:43 am

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வவுனியா மாவட்டத்தில் இரண்டாம் நாளாக இன்றும் சாட்சியங்களை பதிவுசெய்யவுள்ளது.

வடமாகாணத்திற்கான இறுதிக்கட்ட சாட்சி விசாரணைகளின் ஒரு கட்டமாக கடந்த 25 ஆம் திகதி முதல் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வட மாகாணத்திற்கான இறுதிக்கட்ட சாட்சி விசாரணைகளின் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று முதலாம் நாள் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்போது 154 பேர் ஆணைக்குழு முன்னிலையில் தோன்றி சாட்சியமளித்ததாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுதவிர காணாமல்போனோர் தொடர்பில் நேற்று புதிதாக 79 பேரிடமிருந்து ஆணைக்குழு முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டது.

காணாமற்போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைகுகுழுவின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிப்பதற்காக 218 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்