காணாமற்போனோரின் உறவினர்கள் அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம்

காணாமற்போனோரின் உறவினர்கள் அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2016 | 10:08 pm

காணாமற்போனோரின் உறவினர்கள் அம்பாறை – அக்கரைப்பற்றில் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும், அக்கரைப்பற்று பஸ் நிலையத்திற்கு முன்பாகவும் இன்று காலை காணாமற்போனோரின் உறவினர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமற்போனோரைத் தேடித்தர வேண்டும், நல்லாட்சியில் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய கறுப்புத் துணிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது தலைகளில் கட்டியிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்