உனவட்டுன, எல்பிட்டியவில் துப்பாக்கிகள், ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

உனவட்டுன, எல்பிட்டியவில் துப்பாக்கிகள், ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2016 | 9:46 pm

காலி – உனவட்டுன மற்றும் எல்பிட்டிய உள்ளிட்ட சில பகுதிகளில் இன்றும் கடந்த சில நாட்களிலும் துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டன.

காலி – உனவட்டுன பிரதேசத்திலுள்ள வீடொன்றிற்குள் இருந்து சட்டவிரோத துப்பாக்கிகள் சிலவும், ஒரு தொகை ரவையும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் உனவட்டுன மற்றும் பொரலஸ்கமுவ பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ரி 56 ரக துப்பாக்கியுடனும் ஒரு தொகை ரவைகளுடனும் ஒருவர் எல்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாக்கியையும் ரவைகளையும் நபரொருவருக்கு விற்பனை செய்வதற்காக காரொன்றில் கொண்டு சென்ற போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

பிட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்