இவ்வருடம் வாகனப்பதிவு வீதம் வீழ்ச்சி

இவ்வருடம் வாகனப்பதிவு வீதம் வீழ்ச்சி

இவ்வருடம் வாகனப்பதிவு வீதம் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2016 | 6:36 am

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வாகனங்களை பதிவு செய்தல் 50 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் 4,138 வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட போதும் இந்த வருடம் அந்த எண்ணிக்கை அரைவாசியாக குறைவடைந்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு சுமார் 6,00,000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வருடத்தில்
கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 31,000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் விலை மற்றும் வாகனங்கள் மீதான வரிகள் ஆகியன உயர்வடைந்தமையே இதற்கான காரணம் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்