புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய சூழல் மிஞ்சியிருக்குமா: சூழலியலாளர்கள் கேள்வி 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய சூழல் மிஞ்சியிருக்குமா: சூழலியலாளர்கள் கேள்வி 

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2016 | 10:17 pm

இலங்கை மின்சார சபையின் நீண்டகால மின் உற்பத்தியை விரிவுபடுத்தும் திட்டத்துடன் தொடர்புடைய அனல் மின் உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 3 அனல் மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

அதன் முதலாவது மின் உற்பத்தி நிலையமான 900 மெகாவாட் உற்பத்தியைக் கொண்டு நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் தற்போது செயற்படுத்தப்படுவதுடன், சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது அனல் மின் உற்பத்தி நிலையமான சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையம் ஜப்பானின் புதிய மின்சக்தி மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து நிர்மாணிக்கப்படுவதாக அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய கூறினார்.

இதன் ஊடாக 1200 மெகாவாட் உற்பத்தி செய்யப்படவுள்ளதுடன், இந்த மின் உற்பத்தி நிலையம் அதிக செயற்றிறன்மிக்கவொன்று எனவும், சூழலுக்கு உகந்தவொன்று எனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின் உற்பத்தி நிலையமொன்றையும் இலங்கையில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறைந்த காலத்திற்குள் நிர்மாணிக்கப்படக்கூடிய, சூழல் பாதிப்புக்கள் குறைந்த, இயற்கையான வாயு மின் உற்பத்தி நிலையங்களை மறந்து, அனல் மின் உற்பத்தி நிலையத்தின் பின்னால் செல்வது சிக்கலான விடயம் என சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், வாயு எரிபொருள் உற்பத்தி நிலையத்திற்கு அதிக செலவு எனக் கூறி விடயத்தை திசை திருப்பும் செயற்பாடு இடம்பெறுவதாகவும் சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்