அக்குரஸ்ஸ துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

அக்குரஸ்ஸ துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

அக்குரஸ்ஸ துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2016 | 6:39 am

அக்குரஸ்ஸ – ரிலாகலதெனிய பகுதியில் நேற்று இடம் பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அக்குரஸ்ஸ பகுதியை சேர்ந்த அஜித் பிரசன்ன எனும் ஒரு குழந்தையின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் கறுவா உடைத்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த பர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சம்பவத்திற்கான காரணம் இது வரையில் தெரியவரவில்லை.

உயிரிழந்த நபரின் சடலம் அக்கரஸ்ஸ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்