தலிபான்களின் ஆதிக்கப் பகுதியில் ஆண் வேடமிட்டு வாழ்ந்த வீராங்கனை: சுயசரிதைப் புத்தகம் வெளியிட்டுள்ளார்

தலிபான்களின் ஆதிக்கப் பகுதியில் ஆண் வேடமிட்டு வாழ்ந்த வீராங்கனை: சுயசரிதைப் புத்தகம் வெளியிட்டுள்ளார்

தலிபான்களின் ஆதிக்கப் பகுதியில் ஆண் வேடமிட்டு வாழ்ந்த வீராங்கனை: சுயசரிதைப் புத்தகம் வெளியிட்டுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

29 Mar, 2016 | 4:08 pm

பாகிஸ்தானின் தென் வசிரீஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும்.

உலகின் ஆபத்தான பகுதிகளின் பட்டியலில் இந்தப் பகுதியும் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள பெண்களுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அவர்கள் வீட்டை வீட்டை விட்டு வெளியில் செல்லவோ, கல்வி கற்கவோ, ஆடம்பர உடைகளை அணியவோ அனுமதிக்கப்படுவதில்லை.

இத்தகைய கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு மரியா துர்பாக்கை என்ற பெண், ஆண் வேடமிட்டு வசித்து வந்துள்ளார்.

ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனையாக வேண்டும் எனும் தனது இலட்சியத்தை நிறைவேற்றவே அவர் ஆண் வேடமிட்டு அந்தப் பகுதியை வலம் வந்துள்ளார்.

சிறு வயது முதலே அப்பெண்ணின் இலட்சியப் பயணத்திற்கு அவரது தந்தையும் பக்கபலமாக இருந்துள்ளார்.

மரியா முதலில் தனது பெயரை சென்ஜிஸ்கான் என மாற்றிக்கொண்டார். ஆரம்பத்தில் பளு தூக்கும் வீரராகத் திகழ்ந்த அவர் பின்னர் ஸ்குவாஷ் விளையாட்டின் மீது அதிக ஈடுபாடு கொண்டார்.

இந்நிலையில், தான் பெண் என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தினார்.

இந்த உண்மையை அவர் வெளிப்படுத்தியதற்கு தீவிர மன அழுதம் தான் காரணம் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து அவருக்குப் பல மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் அவர் தொடர்ந்தும் போட்டிகளில் கலந்துகொண்டதுடன், அவருக்கான வாய்ப்புகள் இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது பாகிஸ்தானின் சிறந்த ஸ்குவாஷ் வீராங்கனையாகத் திகழ்கிறார். உலக அளவில் சிறந்த வீராங்கனை பட்டியலில் 46 ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளார்.

இந்நிலையில், தனது சுயசரிதையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

இதில் தான் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களை அவர் உணச்சிப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.

1 2

Pakistani squash player Maria Toorpakai Wazir is playing in the Nash Cup at the London Squash and Fitness Club in London on Thursday September 19, 2013.  Growing up under Taliban rule, Maria had to pass herself off as a boy, using an alias, to be able to play. CRAIG GLOVER The London Free Press / QMI AGENCY

4 5 6 7


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்