வித்தியா கொலை: நீதிமன்றிற்கு இன்னமும் சமர்பிக்கப்படாத மரபணு பரிசோதனை அறிக்கை

வித்தியா கொலை: நீதிமன்றிற்கு இன்னமும் சமர்பிக்கப்படாத மரபணு பரிசோதனை அறிக்கை

வித்தியா கொலை: நீதிமன்றிற்கு இன்னமும் சமர்பிக்கப்படாத மரபணு பரிசோதனை அறிக்கை

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 7:14 pm

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 11 பேரும் இன்று ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம் எம் றியாழ் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

சந்தேகநபர்களை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இன்றைய தினம் 5 ஆம் மற்றும் 6 ஆம் இலக்க சந்தேக நபர்களை சந்திப்பதற்கு அவர்களின் சட்டத்தரணிகள் அனுமதி கோரினர்.

இதன் போது சாதாரண நடைமுறையின் அடிப்படையில் சந்தேகநபர்களை அனுமதிக்க முடியாது எனவும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றே அவர்களை சந்திக்க வேண்டும் என நீதவான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றைய தினமும் மரபணு பரிசோதனை அறிக்கை மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்