யேமனில் கைதிகள் பரிமாற்றம்

யேமனில் கைதிகள் பரிமாற்றம்

யேமனில் கைதிகள் பரிமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 5:40 pm

யேமனில் இயங்கும் ஹுத்தி கிளர்ச்சியாளர்களும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினரும் கைதிகளைப் பரிமாற்றம் செய்துக்கொண்டனர்.

தமது இந்த கைதிகள் பரிமாற்றம் தொடர்பில், இரு தரப்பினரும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

நூற்றுக்கும் அதிகமான தமது போராளிகளை விடுதலை செய்தவற்காக, ஒன்பது சவூதியரை ஈரானிய ஆதரவு கிளர்ச்சிக் குழு விடுதலை செய்துள்ளது.

மனித நெருக்கடி போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முதற்கட்ட நடவடிக்கை இது என ஹுத்தி கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யேமன் தலைநகர் சனாவை கடந்த வருடம் ஜனவரி மாதம் கிளர்ச்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததையடுத்து, அந்நாட்டு அதிபர் அப்த் ராப்பு மன்சூர், நாட்டை விட்டு வெளியியேறினார்.

இவ்வாறு வெளியேறிய அதிபர் மன்சூரின் ஆட்சியை, யேமனில் மீள ஏற்படுத்துவதற்காக சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்