மின்சார கதிரை தொடர்பில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் எவரும் பேசவில்லை – ஜனாதிபதி

மின்சார கதிரை தொடர்பில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் எவரும் பேசவில்லை – ஜனாதிபதி

மின்சார கதிரை தொடர்பில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் எவரும் பேசவில்லை – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 7:42 pm

நாரம்மல மயுரபாத கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.

நாரம்மல மயுரபாத மத்திய கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதி அங்கு அமைக்கப்பட்டுள்ள கணணி ஆய்வுகூடத்தையும், விளையாட்டு மைதானத்தையும் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி தெரிவித்ததாவது ;

[quote]இந்த வருடம் மார்ச் மாதத்தில் இலங்கையில் எவரும் ஜெனீவா தொடர்பில் பேசுவதில்லை. மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் பேசுவதில்லை. இந்த வருடம் மார்ச் மாதம் மனித உரிமைப் பேரவை கூடியதா என்பது இன்று சாதாரண மக்களுக்கு தெரியாது. எனினும் கடந்த ஐந்து வருடங்களில் பழைய பத்திரிகைகளைப் பார்த்தால் இந்த காலப்பகுதியில் ஜெனீவா விவகாரமே பிரதான தலைமைப்புச் செய்திகளாக வௌியாகியிருந்தன. ஐக்கிய நாடுகளல் சபை உள்ளிட்ட உலகில் அனைத்து நாடுகளும் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அரச கொள்கையில் ஜனநாயகமும், மனித உரிமையைும் உறுதிப்படுத்தப்படுகிறது என்பதனை புரிந்து கொண்டுள்ளன.அதனால் கடந்த ஐந்து வருடங்களில் பேசப்பட்ட மின்சார கதிரை தொடர்பில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் எவரும் பேசவில்லை. மின்சார கதிரை என்பதனை எமது அகராதியில் இருந்து நீக்கியுள்ளோம்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்