மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளதால் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சாத்தியம்

மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளதால் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சாத்தியம்

மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளதால் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சாத்தியம்

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 1:42 pm

மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளதால் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் மின்வெட்டை அமுல்படுத்தாமல் மக்களுக்கு மின்சாரத்தை தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான வானிலையால் நீர்மின் உற்பத்தியை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

எனினும் மின்வெட்டு இன்றி பொதுமக்களுக்கு மின்சாரத்தை விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை நீர்மின் விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நாளாந்தம் மின்சாரத்தை ஒரு மணித்தியாலத்திற்கு துண்டிக்க வேண்டும் என இலங்கை மின் பொறியியலாளர்கள் சங்கம் பரிந்துரைத்துள்ளது.

அவ்வாறில்லாத பட்சத்தில், எதிர்காலத்தில் மின்சார விநியோகத்தில் இதனை விட அதிக நெருக்கடி ஏற்படும் சாத்தியமுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் அத்துல வன்னியாராச்சி எச்சரித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்