மின்கட்டமைப்புகளின் ஏற்படும் கோளாறுகளால் பெரும் நெருக்கடி

மின்கட்டமைப்புகளின் ஏற்படும் கோளாறுகளால் பெரும் நெருக்கடி

மின்கட்டமைப்புகளின் ஏற்படும் கோளாறுகளால் பெரும் நெருக்கடி

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 10:50 am

நாட்டில் தற்போது நிலவும் வரட்சி மற்றும் மின்கட்டமைப்புகளின் ஏற்படும் கோளாறுகளால் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சார முகாமைத்துவத்தினூடாக மின்சாரத்தை தடையின்றி வழங்க முயற்சிப்பதாக பிரதி அமைச்சர்
அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை நீர்மின் விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நாளாந்தம் மின்சாரத்தை ஒரு மணித்தியாலத்திற்கு துண்டிக்க வேண்டும் என இலங்கை மின் பொறியியலாளர்கள் சங்கம் பரிந்துரைத்துள்ளது.

அவ்வாறில்லாத பட்சத்தில், எதிர்காலத்தில் மின்சார விநியோகத்தில் இதனை விட அதிக நெருக்கடி ஏற்படும் சாத்தியமுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் அத்துல வன்னியாராச்சி எச்சரித்துள்ளார்.

இதேவேளை ஹபரணை முதல் அநுராதபுரத் வரையிலான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று (27) பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டதாக இலங்கை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ஒரு மணித்தியாலத்திற்குள் மின்சார விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்பட்டதாக சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்