மற்றுமொரு நுரைச்சோலையாக மாறுமா சம்பூர்?

மற்றுமொரு நுரைச்சோலையாக மாறுமா சம்பூர்?

மற்றுமொரு நுரைச்சோலையாக மாறுமா சம்பூர்?

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 9:30 pm

சம்பூரில் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசத்தை சூழ வசிக்கும் மக்களும் ஊடகவியலாளர்கள் சிலரும் இன்று நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டதுடன் அந்த பிரதேசத்தையும் கண்காணித்தனர்.

சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் வரையறுக்கப்பட்ட சுற்றாடல் மன்றத்தின் ஒத்துழைப்புடன் இன்று நுரைச்சோலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

முதலில் சம்பூர் மக்கள் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தை சூழவுள்ள பிரதேசங்களை கண்காணித்தனர்.

மின் உற்பத்தி நிலையத்தின் பின்புறத்தில் குவிக்கப்பட்டுள்ள நிலக்கரி, அந்த பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை எம்மால் கவனத்திற்கொள்ளாதிருக்க முடியவில்லை.

இவ்வாறு நிலக்கரி குவிக்கப்படுகின்றமை சுற்றாடல் ஆய்வறிக்கையின் பரிந்துரைகளை மீறும் செயற்பாடாகும் என சுற்றாடல் அமைச்சின் முன்னாள் ஆலோசகர் கலாநிதி ஜனக்க ரத்னசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலக்கரி மாத்திரமல்லாது மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பலை வெளியேற்றுவதற்காக கையாளப்பட்டுள்ள முறைமையும் சிக்கலுக்குரியது என இந்த கண்காணிப்பு பயணத்தில் இணைந்திருந்த சுற்றாடல் மன்றம் தெரிவித்தது.

மின் உற்பத்தி நிலையத்தை சூழவுள்ள பகுதிகளை பார்வையிட்ட சம்பூர் மக்கள் நுரைச்சோலையிலுள்ள மீனவர்களையும் சந்தித்து நிலைமையை கேட்டறிந்தனர்.

அனல் மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வருடாந்தம் படிப்படியாக மீன்வளம் குறைந்து வருவதாக இதன்போது மீனவர்கள் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்