மன்னார் மாவட்ட காணாமற்போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் புதிதாக 28 முறைப்பாடுகள்

மன்னார் மாவட்ட காணாமற்போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் புதிதாக 28 முறைப்பாடுகள்

மன்னார் மாவட்ட காணாமற்போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் புதிதாக 28 முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 7:29 pm

காணாமற்போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இன்று மன்னாரில் இடம்பெற்றது.

ஒருநாள் மாத்திரமே ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெறுவதால் மன்னார் மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலும் இருந்து மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டார்.

இன்று காலை மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணியளவில் ஆரம்பமான சாட்சி விசாரணைகளுக்காக 257 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் 167 சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
புதிதாக 28 பேரின் முறைப்பாடுகளும் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதிக்கட்ட சாட்சி விசாரணைகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகின.

எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான ஆறு நாட்களுக்கு இந்த சாட்சி விசாரணை அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச குறிப்பிட்டார்.

இதன் முதல் கட்ட விசாரணைகள் கடந்த மூன்று நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றன.

இந்த அமர்வுகளில் மூன்று நாட்களிலும் 466 பேர் சாட்சியங்களை பதிவு செய்ததுடன் புதிததாக 137 முறைப்பாடுகளையும் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதேவேளை நாளை மற்றும் நாளை மறுதினம் வவுனியா மாவட்டத்தில் சாட்சி விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

அத்துடன் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கிழக்கின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் காணாமல்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்