போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 7 பேர் கைது

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 7 பேர் கைது

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 7 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 12:09 pm

பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து குறித்த வர்த்தகத்துடன் தொடர்புடைய மாலைதீவை சேர்ந்த தம்பதியினர் நேற்று (27) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியினரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து, வௌ்ளவத்தை பகுதியில் தங்கியிருந்த மேலும் இரு மாலைதீவு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாலைதீவு பிரஜைகளில் 19 வயது யுவதியொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகளை அடுத்து போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரதான வர்த்தகரான கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனுடன் தொடர்புபட்ட மேலும் இரண்டு இலங்கை பிரஜைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேநபர்கள் 7 பேரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்