நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையால் தேயிலை செய்கையில் வீழ்ச்சி

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையால் தேயிலை செய்கையில் வீழ்ச்சி

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையால் தேயிலை செய்கையில் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 7:46 am

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையால் தேயிலை செய்கையில் நூற்றுக்கு 50 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக சங்கத்தின் பிரதான ஏற்பாட்டாளர் லால் பிரேமநாத் குறிப்பிட்டார்.

சில தேயிலை தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் அரசாங்கத்திடமிருந்து சலுகைகளை எதிர்பார்ப்பதாகவும் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெருமளவு அந்திய செலாவணியை ஈட்டுவதற்கு பங்களிப்பு செய்யும் தேயிலை தோட்ட செய்கையாளர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறித்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்