தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளில் ஒரு குழுவினர் தாயகம் திரும்பினர்

தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளில் ஒரு குழுவினர் தாயகம் திரும்பினர்

தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளில் ஒரு குழுவினர் தாயகம் திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 5:45 pm

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளில் ஒரு குழுவினர் இன்று தாயகம் திரும்பினர்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஊயர்ஸ்தானிகராலயத்தின் வசதிப்படுத்தலின் கீழ், இன்று நண்பகல் 18 பேர் நாடு திரும்பியதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடு திரும்பிய அகதிகள் 18 பேரில் 08 பெண்களும் 10 ஆண்களும் உள்ளடங்குவதாகவும் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி,மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தவர்களில் சிலரே இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களுக்கான இலவச விமானச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதுடன், மீள்குடியேற்றத்திற்கான ஒரு தொகை பணமும் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்