கேட்டி சூறாவளியின் காரணமாக இங்கிலாந்தில் பல விமான சேவைகள் இரத்து

கேட்டி சூறாவளியின் காரணமாக இங்கிலாந்தில் பல விமான சேவைகள் இரத்து

கேட்டி சூறாவளியின் காரணமாக இங்கிலாந்தில் பல விமான சேவைகள் இரத்து

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 5:16 pm

கேட்டி சூறாவளியின் காரணமாக இங்கிலாந்திலும் வேல்ஸிலும் 105 மைல் வேகத்தில் காற்று வீசியதால் பல விமான நிலையங்களில் விமான சேவைகள் இரத்துசெய்யப்பட்டுள்ளன. முக்கியமான பாலங்களும் மூடப்பட்டன.

160328101903__88966263_88966261

லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு வர வேண்டிய 20 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன. ஹீத்ரூ விமான நிலையத்தில் 60 விமான சேவைகள் இரத்துசெய்யப்பட்டன.

சுமார் 5,000 இல்லங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. 23 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

மூன்று மிகப் பெரிய பாலங்கள் மூடப்பட்டுள்ளன.

160328101903__88967313_crane_bbc

நள்ளிரவுக்குப் பிறகு கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பிர்மிங்கம், லிவர்பூல், மான்செஸ்டர், ஸ்டான்ஸ்டெட், ஈஸ்ட் மிட்லாண்ட் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

160328101904__88968094_88968093

சஸ்ஸெக்ஸ், சர்ரே, கென்ட் ஆகிய இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டதாக யுகே பவர் நெட்வொர்க்ஸ் தெரிவித்துள்ளது.

160328101903__88966879_gary_croydon_2

இங்காலந்தின் தென் பகுதியில்தான் கேட்டி சூறவாளி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றாலும் ஈஸ்ட் ஆங்லியாவின் சில பகுதிகளிலும் 60 முதல் 70 மைல் வேகத்தில் காற்று வீசிவருகிறது.

திங்கட்கிழமை மதியத்திற்குப் பிறகு நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்