கெய்லின் சாதனையை முறியடித்த கோஹ்லி

கெய்லின் சாதனையை முறியடித்த கோஹ்லி

கெய்லின் சாதனையை முறியடித்த கோஹ்லி

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 3:06 pm

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்ததோடு மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்லின் சாதனையையும் கோஹ்லி முறியடித்துள்ளார்.

அதிவேகமாக டி20 போட்டிகளில் 1500 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நேற்றைய தினம் கோஹ்லி தம் வசப்படுத்தினார்.முன்னராக கெய்ல் வசமே இந்த சாதனை காணப்பட்டது.

கெய்ல் 45 இனிங்ஸ்களில் 1500 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்திருந்தார். ஆனால் கோஹ்லி இதை 39 இனிங்ஸ்களில் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். மேலும் டி20 போட்டிகளில் 1500 ரன்களைக் குவித்த முதல் இந்திய வீரர் கோஹ்லிதான்.

மேலும் டி20 போட்டிகளில் சிறந்த சராசரி கோஹ்லியினுடையது. அவரது சராசரி 55.42 ஆகும். இதுவரை 42 போட்டிகளில் ஆடியுள்ளார் கோஹ்லி.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்