கட்டுமுறிவு அரசினர் தமிழ் பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

கட்டுமுறிவு அரசினர் தமிழ் பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

கட்டுமுறிவு அரசினர் தமிழ் பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 1:34 pm

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யக் கோரிஆர்ப்பாட்டடொன்று இன்று (28) காலை முதல் இடம்பெற்றது.

தரம் 1 முதல் சாதாரண தரம் வரையான வகுப்புக்களை கொண்ட குறித்த பாடசாலையில் 7 ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றுவதாக ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த விடயம் குறித்து கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.ஶ்ரீ கிருஷ்ணராஜாவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இந்த பாடசாலை, நகரிலிருந்து வெகு தொலைவில் காணப்படுவதால் போக்குவரத்து மற்றும் ஏனைய விடயங்களின் அடிப்படையில் குறித்த பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல் நிலை காணப்படுவதாக கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.ஶ்ரீ கிருஷ்ணராஜா தெரிவித்தார்.

அடுத்த தவணை முதல் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களை கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு நியமிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இன்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதால் உடனடி தீர்வாக , பாடசாலைக்கு அருகிலுள்ள கதிரவெளி பகுதியை வதிவிடமாக்க் கொண்ட ஆசிரியர்களை நியமிக்கவுள்ளதாக கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

கதிரவெளியை வதிவிடமாக் கொண்ட 3 ஆசிரியர்களை தெரிவு செய்து கட்டுமுறிவு பாடசாலைக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தினால் வாகரை மற்றும் திருமலை பிரதான வீதியில் சுமார் 1 மணித்தியாலமாக வாகன போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கல்குடா கல்வி வலயப் பணிப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடியதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாகவும் பிராந்திய செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்