உஷ்ணமான காலநிலை மேலும் தொடருமா?

உஷ்ணமான காலநிலை மேலும் தொடருமா?

உஷ்ணமான காலநிலை மேலும் தொடருமா?

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 7:04 pm

கடந்த ஜனவரியில் இருந்து நாட்டில் அதிக உஷ்ணமான வானிலை நிலவுகிறது.

இன்று சில பிரதேசங்களில் மழை பெய்தாலும் மே மாதம் வரை போதுமானவு மழையை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் வெப்பநிலை இரண்டு அல்லது மூன்று மூன்று பாகை செல்சியசால் அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகம் புவியியல் பிரிவு பேராசிரியர் எஸ். ஏ நோபட் ;

[quote] வழக்கத்துக்கு மாறாக இம்முறை மார்ச் மாதத்தில் மிக்ககூடுதலான வெப்பநிலை காணப்படுவதை அவதானிக்கலாம். வளிமண்டலத்தில் ஏற்படுகின்ற வெப்பநிலை அதிகரிப்பு, பச்சை வீட்டுவாயுக்களின் காரணமாக, மனித செயற்பாடுகளின் காரணமாக காபனீரொட்சைட்,மெதேன் போன்ற வாயுக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு, எல்நினோவினுடைய தாக்கத்தின் காரணமாக என்சோவினுடைய தாக்கத்தின் காரணமாக ஏற்படுகின்ற மாற்றங்கள் என பல்வேறு வகையான காரணிகளும் இணைந்து இந்தமாதத்தினுடைய வெப்பநிலையை மிக உயர்வாக அதிகரித்திருக்கின்றன. [/quote]

[quote] குறிப்பாக உலகினுடைய சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதாரண அளவைக் காட்டிலும் 1.35 பாகை செல்சியஸ் அதிகரிப்பு, 1951 தொடக்கம் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியை காட்டிலும் மிக உயர்வாக காணப்பட்டிருக்கின்ற தன்மை புலப்படுகின்றது. எனவே வருகின்ற மாதமும் இந்த மிக உயர்வான வெப்பநிலை கொண்டதாக காணப்படும். இதன் விளைவாக மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியமானது. [/quote]

எனத் தெரிவித்தார்.

மேலும் தொடரும் உஷ்ணமான காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். நீர் மின் உற்பத்தி தற்போது 18 வீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 40 வீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகிறது. சில நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 16 அல்லது 20 வீதமான குறைவடைந்துள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் மின்சாரத்தை துண்டிக்காமல் தொடர்ந்து விநியோகிக்க முயற்சிப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று சில பிரதேசங்களில் மழை பெய்துள்ளது. இன்று பிற்பகல் 3.30 வரையான 24 மணித்தியாலத்ில் நுவரெலியா மாவட்டத்திற்கு அதிக மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது. குறித்த காலப்பகுதியில் அங்கு 38.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்