மேற்கிந்தியத்தீவுகளை வென்றது ஆப்கானிஸ்தான்

மேற்கிந்தியத்தீவுகளை வென்றது ஆப்கானிஸ்தான்

மேற்கிந்தியத்தீவுகளை வென்றது ஆப்கானிஸ்தான்

எழுத்தாளர் Staff Writer

27 Mar, 2016 | 6:34 pm

இன்றைய தினம் இடம்பெற்ற குழு 1 இற்கான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 6 ஓட்டங்களால் வென்றது ஆப்கானிஸ்தான் அணி.

பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படாத இந்த போட்டியில் அபாரமாக விளையாடி டெஸ்ட் அந்தஸ்துள்ள நாடுகளுக்கு எதிரான முதலாவதி டி20 வெற்றியை ஆப்கானிஸ்தான் இன்று பெற்றுக்கொண்டது.

நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியினால் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 6 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்