தமது உறவுகள் எங்கே ? ஆணைக்குழு முன் கேள்வியெழுப்பும் முல்லை மக்கள்

தமது உறவுகள் எங்கே ? ஆணைக்குழு முன் கேள்வியெழுப்பும் முல்லை மக்கள்

தமது உறவுகள் எங்கே ? ஆணைக்குழு முன் கேள்வியெழுப்பும் முல்லை மக்கள்

எழுத்தாளர் Staff Writer

27 Mar, 2016 | 6:55 pm

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்ற தமது உறவுகள் எங்கே என காணாமற்போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முல்லைத்தீவு மக்கள் இன்று வினவினர்.

ஜனாதிபதி ஆணைக்குழு இன்று மூன்றாவது நாளாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கூடியது.

காணாமற்போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், கடந்த 25ஆம் திகதி தொடக்கம் இன்று வரை 466 பேர் சாட்சியமளித்துள்ளனர்.

இன்றைய தினத்தில் மாத்திரம் 206 பேரிடம் சாட்சிங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ குணதாச தெரிவித்தார்.

இதன்போது, புதிததாக 137 முறைப்பாடுகளையும் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

இன்றைய சாட்சி விசாரணைகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தவர்களில் பலர் சமூகமளித்து சாட்சியமளித்திருந்தனர்.

ஜனாதிபதி ஆணைக்கழுவின் அமர்வு நாளை, மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்