சிறைச்சாலைகளுக்கு போதைப்பொருள் கொண்டுவருவதை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை

சிறைச்சாலைகளுக்கு போதைப்பொருள் கொண்டுவருவதை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை

சிறைச்சாலைகளுக்கு போதைப்பொருள் கொண்டுவருவதை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

27 Mar, 2016 | 10:15 am

சிறைச்சாலைகளுக்கு போதைப்பொருள் கொண்டுவருவதை தடுப்பதற்கு பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் முதற்கட்டத்தை வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னெடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய கூறினார்.

சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளுள் 60 வீதத்திற்கும் மேற்பட்டோர் போதைப் பொருட்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே அதிக கைதிகள் சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் கூறினார்.

இந்த முயற்சிகளை முறியடிக்கும் வகையில் பொலிஸாருடன் இணைந்து மோப்ப நாய்களை பயன்படுத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்