ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து வரலாற்று சிறப்பு வாய்ந்த பல்மைரா நகரை சிரியா படைகள் கைப்பற்றின

ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து வரலாற்று சிறப்பு வாய்ந்த பல்மைரா நகரை சிரியா படைகள் கைப்பற்றின

ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து வரலாற்று சிறப்பு வாய்ந்த பல்மைரா நகரை சிரியா படைகள் கைப்பற்றின

எழுத்தாளர் Staff Writer

27 Mar, 2016 | 2:36 pm

சிரியாவின் வரலாற்று சிறப்புமிக்க புராதான நகரமான பால்மைராவை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து சிரியா படைகள் கைப்பற்றியுள்ளன.

இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க பல பழங்கால நினைவுத்தூண்களையும், நினைவுச் சின்னங்களையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த சில மாதங்களாக அழித்தொழித்து நாசப்படுத்தி வந்தனர். எஞ்சியிருக்கும் சில கலைப் பொக்கிஷங்களயாவது காப்பாற்றும் நோக்கத்தில் அரசுக்கு ஆதரவான போராளி குழுக்களுடன் ஒன்றிணைந்து இங்கு ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சிரியா இராணுவத்தினர் மூர்க்கமாக போரிட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை பால்மைரா நகரின் கிழக்கு நுழைவாயில் வழியாக முன்னேறிச் சென்ற அரசுப் படைகள், அங்கிருந்த தீவிரவாதிகளை புறமுதுகிட்டு ஓடவைத்து பால்மைரா நகரை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்