உலகில் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியலில் பரிசுத்த பாப்பரசர் முதலிடத்தில்

உலகில் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியலில் பரிசுத்த பாப்பரசர் முதலிடத்தில்

உலகில் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியலில் பரிசுத்த பாப்பரசர் முதலிடத்தில்

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2016 | 11:23 am

உலகில் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியலில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.

சுவிட்ஸர்லாந்தின் பிரபல ஆய்வு நிறுவனமொன்றினால் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் பிரபல அரசியல் பிரமுகர்களும் பட்டியலில் பின்தள்ளப்பட்டுள்ளனர்.

64 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பரிசுத்த பாப்பரசர் முதலிடத்திலும், அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா 2 ஆம் இடத்திலும் ஜேர்மன் அதிபர் 3 ஆம் இடத்திலும் உள்ளனர்.

இதேவேளை உலகின் செல்வாக்குள்ள பிரபலங்களின் உத்தேச பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய பிரதமர் மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகளவில் அறிவியல், திரைப்படம், விளையாட்டு, தொழில்நுட்பம், நிறுவனங்களின் தலைவர்கள் என செல்வாக்குடன் வலம் வரும் 100 பிரபலங்களை தேர்ந்தெடுத்து, ‘டைம்ஸ்’ இதழ் ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான இறுதி பட்டியல் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்