மாயமான மலேசிய விமானம்: தென் ஆப்பிரிக்கக் கடலில் என்ஜின், மொசாம்பிக்கில் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

மாயமான மலேசிய விமானம்: தென் ஆப்பிரிக்கக் கடலில் என்ஜின், மொசாம்பிக்கில் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

மாயமான மலேசிய விமானம்: தென் ஆப்பிரிக்கக் கடலில் என்ஜின், மொசாம்பிக்கில் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2016 | 4:08 pm

239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் என்ஜின் தென் ஆப்பிரிக்கக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்குப் புறப்பட்ட மலேசியன் எயார்லைன்சைச் சேர்ந்த போயிங் MH370 விமானம் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி அதிகாலை தெற்கு சீன கடற்பகுதியில் மாயமானது. ஆனால், அந்த விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியிருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டது.

மாயமான விமானத்தைக் கண்டுபிடிக்க மலேசியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள் 39 விமானங்கள் மற்றும் 42 கப்பல்களை தேடும் பணியில் ஈடுபடுத்தின. ஆனால், எதுவும் கிடைக்காததால் அதில் பயணம் செய்த 239 பேரும் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாத இறுதியில் பிரான்ஸின் ரீயூனியன் தீவில் விமானத்தின் இறக்கைகள் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றை அவுஸ்திரேலியாவின் நீர்மூழ்கி வீரர்கள் தென் இந்தியப் பெருங்கடலில் மீட்டனர்.
இதற்கிடையே, தற்போது தென் ஆப்பிரிக்காவின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் கேப்டவுன் அருகே மொசல்பே நகரக் கடலில் ஒரு விமானத்தின் என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. அது விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தின் என்ஜினாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இத்தகவலை மலேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மாயமான விமானத்தின் என்ஜினா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மொசாம்பிக் கடலில் விமானத்தின் உடைந்த 2 பாகங்களை அவுஸ்திரேலியா மீட்புக் குழு கண்டுபிடித்தது. அதுவும் மாயமான மலேசிய விமானத்தின் பாகமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்